வெள்ளியணை அரசுப் பள்ளியில் அறிவியல் கருத்தரங்கு

வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.

வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.
பல்லுயிர் பாதுகாப்பு என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் சி. தமிழரசன் தலைமை வகித்தார்.
கரூர் கொங்கு கலை, அறிவியல் கல்லூரி நுண்உயிரியல் பேராசிரியர் முனைவர் என். ஆனந்தகுமார் பங்கேற்று மாணவர்களிடம் பாக்டீரியா, புரோட்டோசோவா போன்ற நுண்ணுயிரிகளின் பயன்கள், ராமேஸ்வரம் கடற்கரைப் பகுதியில் உள்ள பவளப்பாறைகளில் உள்ள புரோட்டோசோவாக்களின் பயன்கள், தாவரங்கள், பூச்சிகள், பறவைகளால் மனிதர்களுக்கு ஏற்படும் நன்மைகள் மற்றும் இன்று உலகில் அழிந்து வரும் நிலையில் உள்ள விலங்குகள், பறவையினங்கள், தாவர வகைகள் மற்றும் சூற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து ஒளிக்காட்சி மூலம் விளக்கம் அளித்தார். கருத்தரங்கில் உதவித் தலைமை ஆசிரியர் பெ. பொன்ராஜ், அறிவியல் ஆசிரியைகள் து. கவிதா, ம. பூலோகஅரசி மற்றும் இளம் விஞ்ஞானிகள் குழு மாணவர்கள், அப்துல்கலாம் துளிர் இல்லம் மாணவர்கள் திரளாகப் பங்கேற்றனர். ஏற்பாடுகளை அப்துல்கலாம் துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளர் பெ. தனபால் செய்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com