கோரிக்கை மனுக்கள் உடனுக்குடன் பரிசீலிக்கப்படும்: அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் உடனுக்குடன் பரிசீலிக்கப்படும் என்றார் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்.

பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் உடனுக்குடன் பரிசீலிக்கப்படும் என்றார் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்.
கரூர் ஒன்றியம் வாங்கல், மண்மங்கலம், காதப்பாறை, ஆத்தூர்பூலாம்பாளையம் பகுதிகளில் சிறப்பு மனுநீதிநாள் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு அமைச்சர் பேசியது:
தமிழக முதல்வர் உத்தரவின்படி ஊராட்சி வாரியாக பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. வாரத்தில் திங்கள்கிழமைதோறும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், வாரத்தில் வெள்ளிக்கிழமை அம்மா திட்ட முகாம், மாதத்தில் ஒரு நாள் மக்கள் தொடர்பு முகாம் மற்றும் 253 பொதுசேவை மையங்கள் அமைக்கப்பட்டு மக்களின் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசி, கல்விக்காக ரூ. 24,000 கோடி நிதி ஒதுக்கி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, கணினி முதல் காலணி வரை வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகளை 100 சதவீதம் வழங்கியதுடன், ஏழை பெண்களின் திருணமத்திற்கு திருமாங்கல்யம் என பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதோடு, பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் உடனுக்குடன் பரிசீலிக்கப்பட்டு, கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன என்றார் அமைச்சர்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ச. சூர்யபிரகாஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, தனித் துணை ஆட்சியர் ஜான்சிராணி, கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் அன்புச்செல்வன், வட்டாட்சியர் ராம்குமார், கரூர் நகர்மன்ற முன்னாள் துணைத் தலைவர் ஏ.ஆர். காளியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com