ஆன்லைன் பதிவு நடைமுறை சிக்கல்களை களைய வேண்டும்: பத்திரம்-நகல் எழுதுவோர் சங்கம் வலியுறுத்தல்

ஆன்லைன் பத்திரப்பதிவில் உள்ள நடைமுறை சிக்கல்களை களைய வேண்டும் என தமிழ்நாடு பத்திரம் - நகல் எழுதுவோர் சங்கத்தின் மாநில நிர்வாகக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஆன்லைன் பத்திரப்பதிவில் உள்ள நடைமுறை சிக்கல்களை களைய வேண்டும் என தமிழ்நாடு பத்திரம் - நகல் எழுதுவோர் சங்கத்தின் மாநில நிர்வாகக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கரூரில் அச்சங்கத்தின் மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ். பத்மநாபன் தலைமையில் நடைபெற்றது. மாநில துணைச் செயலாளர் வி. சஞ்சீவி, அமைப்புச் செயலாளர் ஏ.பி. மணிசேகரன், மாவட்ட துணைத் தலைவர் ஏ. கந்தசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
மாநில இணைப்பொதுச் செயலாளர் எம்.ஜி.குணசேகரன் வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் க. கண்ணன், பொருளாளர் கோவிந்தராஜன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் ஆன்லைனில் பத்திரப்பதிவு செய்யும்போது உள்ள நடைமுறை சிக்கல்களை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடில் நீதிமன்றத்தை நாடுவது. ஆவண எழுத்தர்கள் நலநிதியத்தை செயல்பட விரைவாக நடவடிக்கை எடுப்பது, ஆவண எழுத்தர்களின் கூலியை உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாநிலம் முழுவதும் இருந்து பத்திரம் மற்றும் நகல் எழுதுவோர் திரளாக பங்கேற்றனர். மாநில துணைச் செயலாளர் ஏ. சைமன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com