கரூர் மாவட்டத்தில் அனைத்து பாசன வாய்க்கால்களையும் தூர்வார வலியுறுத்தல்

கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாசன வாய்க்கால்களையும் தூர்வார வேண்டும் என கரூர் மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் வலியுறுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாசன வாய்க்கால்களையும் தூர்வார வேண்டும் என கரூர் மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் வலியுறுத்தியுள்ளது.
கரூரில் அக்கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் சனிக்கிழமை மாவட்டத்தலைவர் எம். கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி செயலாளர் என்.வெங்கடேஷ், துணைச்செயலாளர் கே. சத்தியராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்ட நகரச் செயலாளர் டி. மயில்சாமி, நகர இளைஞரணி செயலாளர் ஆர். பாலகிருஷ்ணன் ஆகியோர் அறிமுகப்படுத்தப்பட்டனர்.
தொடர்ந்து கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாசன வாய்க்கால்களையும் தூர்வார வேண்டும். மாவட்டத்தில் குடிநீர் பிரச்னையை தீர்க்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும். கரூரில் மாவட்ட மருத்துவக்கல்லூரிக்கான பணிகளை விரைந்து தொடங்க வேண்டும். நீட்தேர்வுக்கு முழு விலக்கு அளிக்க வேண்டும்.
அமராவதி அணையில் தண்ணீர் திறக்கும்போது கடைமடைப்பகுதியான கரூர் மாவட்டத்திற்கு முழுமையாக தண்ணீர் கிடைக்கும் வகையில் தண்ணீர் திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மாணவர் அணி செயலாளர் சிவா, ஒன்றியச் செயலாளர் வேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com