மாவட்ட அளவிலான ஓவியப்போட்டி: சேரன் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்

கரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான ஓவியப் போட்டியில் கரூர் சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பிடித்தனர்.

கரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான ஓவியப் போட்டியில் கரூர் சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பிடித்தனர்.
 கரூர் அரசு அருங்காட்சியகம் மற்றும் எம்எஸ்.தேவசகாயம் நினைவு கலைகள் மற்றும் கைவினைகள் மையம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஓவியப் போட்டிகள் வியாழக்கிழமை அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. போட்டியில், ஒன்றாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான 15-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 92 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். போட்டிகளை அரசு அருங்காட்சிய காப்பாட்சியர் ஜெ.முல்லையரசு தொடக்கி வைத்தார். 
இதில் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை நடைபெற்ற போட்டியில் வெண்ணைமலை சேரன் மெட்ரிக் பள்ளி மாணவி பிரதிபா முதலிடம், தக்ஷின் பள்ளி மாணவர் விஸ்வநாத் இரண்டாமிடம், வாசவி தொடக்கப்பள்ளி மாணவர் அம்சவர்தன் மூன்றாமிடம் பிடித்தனர். 
6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கான போட்டியில் சேரன் பள்ளி மாணவர் சைலேஷ் முதல் பரிசையும், கரூர் நகர் மன்ற மேல்நிலைப்பள்ளி மாணவர் கோகுல் இரண்டாமிடத்தையும், வெற்றி விநாயகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஆதவா மூன்றாமிடத்தையும் பிடித்தனர். 
போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் சீனிவாசன் சான்றிதழ், பரிசுகள் வழங்கினார். 
நிகழ்ச்சியில் ஓவியர்கள் ராஜூ, ரவிக்குமார், ஈரஸ்வரமூர்த்தி, கோதண்டராமன் உள்ளிட்டோர்  பஙகேற்றினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com