வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு டிச. 15 வரை நீட்டிப்பு

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணிகளுக்கு வரும் 12-ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணிகளுக்கு வரும் 12-ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கு. கோவிந்தராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கரூர் மாவட்டத்தில் 1.1.2018 -ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு 3.10.2017 முதல்  வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.  அதன் ஒரு பகுதியாக
வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வாக்காளர் பட்டியல் சிறப்பு சரிபார்ப்பு பணி கடந்த 30-ம் தேதி வரை  மேற்கொள்ளப்பட்டு  வந்த நிலையில், மேற்படி பணிகளை முழுமையாக மேற்கொள்ள
ஏதுவாக வரும் 15-ம் தேதி வரை மேலும், 15 நாட்கள் கால நீட்டிப்பு செய்து இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 
சிறப்பு சரிபார்ப்புப் பணிகளின்போது  வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய, திருத்த, இடமாற்றம் செய்ய உரிய படிவங்களில் தகுதியான வாக்காளர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும்,
பெறப்படும் விண்ணப்பங்களை  தல விசாரணை செய்யும்போது  வாக்காளர் பட்டியலில் உள்ள அனைத்து விவரங்களையும்  சரிபார்த்திட  வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களின்  
வீடுகளுக்கு நேரில் சென்று ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள ஏற்கெனவே வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்துள்ளவர்களின் பெயர், முகவரி, கைபேசி எண், மின்னஞ்சல்  முகவரி உள்ளிட்ட
விவரங்களைச் சேகரிக்க உள்ளனர். அவ்விவரங்களில் திருத்தங்கள் ஏதும் இருப்பின் அதை சரிசெய்ய  படிவம் 8 பெற்றும் இறந்துபோன மற்றும்  நிரந்தரமாக குடிபெயர்ந்த வாக்காளர்களின் பெயர்களை
நீக்க  படிவம் 7 பெற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், 1.1.2018 -ம் தேதியில் 18 வயது பூர்த்தியடையும்  தகுதியான நபர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்திட படிவம் 6
பெற்றும், 1.1.2019 -ம் தேதியில் 18 வயது நிறைவடையும் எதிர்கால வாக்காளர்கள் குறித்த விவரங்கள் பெற்றும், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெளிநாட்டில் வாழும் தகுதியான நபர்களின் பெயர்களை
வாக்காளர்  பட்டியலில் சேர்த்திட படிவம் 6 பெற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.  
 மேற்படி பணிகளை ஸ்மார்ட் போன்   மூலமாகவோ அல்லது இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட படிவங்கள் மூலமாகவோ மேற்கொள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள்  
வாக்காளர்களின் வீடுகளுக்கு வரும்போது அவர்கள் கோரும் விவரங்களை அளித்து வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்த முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com