எம்ஜிஆர் நூற்றாண்டு விழா:  பள்ளிகளில் மருத்துவ முகாம்

கரூர் மாவட்டத்தில் பள்ளிகளில் மருத்துவ முகாம்களுடன் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா திங்கள்கிழமை தொடங்கியது.

கரூர் மாவட்டத்தில் பள்ளிகளில் மருத்துவ முகாம்களுடன் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா திங்கள்கிழமை தொடங்கியது.
 மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா கரூர் மாவட்டத்தில் வரும் அக். 4-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு மாவட்டத்தில் பள்ளிகளில் மருத்துவ முகாம் நிகழ்ச்சியுடன் திங்கள்கிழமை எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தொடங்கியது.
 அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்டம் ஆகியவற்றின் சார்பில் புனித தெரசா தொடக்கப்பள்ளியில் முகாமை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கி மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் பேசுகையில்,  கரூர் மாவட்டத்தில் 8 ஒன்றியங்களில் இந்த மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இன்று புனித தெரசா தொடக்கப்பள்ளியிலும், நாளை தாந்தோணி ஒன்றியத்துக்குட்பட்ட கவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியிலும், 19-ஆம் தேதி அரவக்குறிச்சி ஒன்றியத்துக்குட்பட்ட அரவக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 20-ஆம் தேதி கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட லாலாப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியிலம் இந்த முகாம் நடக்கிறது.  மேலும் 21-ஆம் தேதி கடவூர் ஒன்றியத்திற்கு தரகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 24-ஆம் தேதி க.பரமத்தி ஒன்றியத்திற்கு க. பரமத்தி அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 25-ஆம் தேதி குளித்தலை ஒன்றியத்திற்கு குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் முகாம் நடக்கிறது. முகாம்களில் 6 முதல் 18 வயதுடைய மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு சிகிச்சை மற்றும் பரிசோதனை வழங்கப்பட உள்ளது. இதனை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறன் மாணவ, மாணவிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com