குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் சங்கத்தினர் ஆட்சியரிடம் மனு

குடிநீர் வடிகால் வாரியத்தின் சலுகைகள் அனைத்தும் வழங்க நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் சங்கத்தினர் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனர்.

குடிநீர் வடிகால் வாரியத்தின் சலுகைகள் அனைத்தும் வழங்க நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் சங்கத்தினர் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனர்.
இதுகுறித்து மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கரூர் கிராம குடிநீர் திட்ட கோட்டத்திற்குட்பட்ட க.பரமத்தி, அரவக்குறிச்சி, பள்ளபட்டி கூட்டுக்குடிநீர் திட்டம், கொசூர் கூட்டுக்குடிநீர் திட்டம், பிள்ளாபாளையம் கூட்டுக்குடிநீர் திட்டம் ஆகியவற்றில் பணியாற்றும் ஒப்பந்த  ஊழியர்களுக்கு வாரியம் நிர்ணயித்துள்ள ஊதியம் பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ளது. இவர்களுக்கு ஒப்பந்ததாரர்களால் சொற்பமான தொகையே வழங்கப்பட்டு வருகிறது.
 மேலும் பல்வேறு தொழிலாளர் சட்ட சலுகைகளும் வழங்கப்படுவதில்லை.  இத்தொழிலாளர்கள் நாளொன்றுக்கு 12 மணி நேரத்திற்கும் மேல் குறையாது வேலை வாங்கப்படுகிறார்கள். ஆனால் மிகை நேரப்பணிக்கான இரட்டிப்பு ஊதியமும் வழங்கப்படுவதில்லை.  மேலும் இந்த ஊழியர்களுக்கு ஈஎஸ்ஐ, பிஎப் பிடித்தம் செய்யப்பட்டாலும் காப்பீடு செய்யப்படாமல் உள்ளது. எனவே ஊழியர்களுக்கு வாரியம் நிர்ணயம் செய்துள்ள ஊதியத்தை கணக்கிட்டு அதன்படியான ஊதியம், மிகை நேர இரட்டிப்பு ஊதியம், போனஸ்,  இதர சட்ட சலுகைகளையும் வழங்கிட  நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com