தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட மாநாடு

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கரூர் மாவட்ட மாநாடு கரூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கரூர் மாவட்ட மாநாடு கரூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இயக்கத் தலைவர் சொ. இராமசுப்ரமணியன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் என். சாகுல்அமீது வரவேற்றார்.
இணைச் செயலாளர் வி.பழனியப்பன், மாவட்டச் செயலாளர் ஜான்பாஷா ஆகியோர் பேசினர்.  இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தீபம் சங்கர், விடியல்காமராஜ்,  தங்கராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  மாநிலத்தலைவர் எஸ்.மோகனா, செயலாளர் எஸ்டி.பாலகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மாநாட்டில் வரும் 21-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை கரூரில் நடைபெற உள்ள புத்தக கண்காட்சியை சிறப்பாக நடத்துவது,  அதில் அறிவியல் செயல்பாடுகளை மாணவ, மாணவிகளிடம் கொண்டு சென்று புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்துவது என ஆலோசிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com