கரூர் அருகே கேஸ் சிலிண்டர்  லாரி கவிழ்ந்து விபத்து

கரூர் அருகே கேஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி செவ்வாய்க்கிழமை கவிழ்ந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் அருகே கேஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி செவ்வாய்க்கிழமை கவிழ்ந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
 ஈரோடு மாவட்டம், பெருந்துறை தொழிற்பேட்டையில் இருந்து கேஸ் சிலிண்டர்கள் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கரூர் ராயனூரில் உள்ள பொன்நகருக்கு வந்தது. பின்னர் அங்குள்ள தனியார் கேஸ் ஏஜென்சியில் சிலிண்டர்களை இறக்கி விட்டு அங்கிருந்த காலி சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு மீண்டும் பெருந்துறையை நோக்கிச் சென்றது. லாரியை ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த முருகேசன் (38) ஓட்டினார்.  லாரி கரூர்-கோடங்கிப்பட்டி சாலையில் ஆச்சிமங்கலம் என்ற இடத்தில் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. இதில் சாலை முழுவதும் கியாஸ் சிலிண்டர்கள் விழுந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் சிலிண்டரில் கேஸ் இருக்கும் என்ற அச்சத்தில் அங்கிருந்து ஓடினர்.  இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் அங்கிருந்தவர்களில் சிலர் லாரி கவிழ்ந்ததில் லாரிக்குள் சிக்கிய ஓட்டுநர் முருகேசனை மீட்டனர். அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அப்போது முருகேசன் சிலிண்டர்கள் அனைத்தும் காலியானவைதான் எனக்கூறியதையடுத்து அப்பகுதியினர் நிம்மதியடைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com