பேரூராட்சித்துறை ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி, கரூரில் தமிழ்நாடு பேரூராட்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினர் புதன்கிழமை தற்செயல் விடுப்பு போராட்டம் மற்றும் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோரிக்கைகளை வலியுறுத்தி, கரூரில் தமிழ்நாடு பேரூராட்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினர் புதன்கிழமை தற்செயல் விடுப்பு போராட்டம் மற்றும் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு செயல் தலைவர் க. பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். பதிவறை எழுத்தர் வை. பாஸ்கர் வரவேற்றார். செயல் அலுவலர் இரா. கிருஷ்ணசாமி கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் மு. மகாவிஷ்ணன், செயலாளர் கே. சக்திவேல், பொருளாளர் பொன். ஜெயராம், சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பிரகாஷ் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.
தகுதிவாய்ந்த ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டும். அடிப்படை பணியாளர் முதல் உதவி இயக்குநர் வரையிலான அனைத்து நிலைகளிலும் உள்ள காலிப்பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும், தினக்கூலி, ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஓட்டுநர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பேரூராட்சித் துறையில் உள்ள அனைத்துப் பணியாளர்களுக்கும் சலவைப்படி வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டங்களை ரத்துசெய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் மு. சுப்ரமணியன், பேரூராட்சி ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் இரா. மாதேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com