வாகனம் மோதி தொழிலாளி சாவு: சாலை மறியலில் ஈடுபட்ட 11 பேர் கைது

வாகனம் மோதி ஜவுளித்தொழிலாளி இறந்ததையடுத்து அவரது சாவில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அவர்களில் 11 பேரைப் போலீஸார் கைது செய்தனர்.

வாகனம் மோதி ஜவுளித்தொழிலாளி இறந்ததையடுத்து அவரது சாவில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அவர்களில் 11 பேரைப் போலீஸார் கைது செய்தனர்.
கரூர் அடுத்த திருமலைநாதன்பட்டியைச் சேர்ந்தவர் வீரமணி (27). இவர், கரூரில் உள்ள ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தில் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்தார். வெள்ளிக்கிழமை இரவு பணி முடிந்து பைக்கில் வெங்கக்கல்பட்டி அருகே அவர் வந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்ததாகக் கூறப்படுகிறது.
அவரது சடலம் கிடப்பதைக்கண்டு, அப்பகுதியில் சனிக்கிழமை காலையில் வீரமணியின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த அவரது உறவினர்கள் வீரமணியின் தலையில் வெட்டுக்காயம் போல இருந்ததால், அவரது சாவில் மர்மம் இருக்கிறது எனக்கூறி கரூர் - திண்டுக்கல் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் பேச்சுவார்த்தைக்கு உடன்படாததால் 11 பேரைக் கைது செய்தனர். பின்னர் விடுவித்தனர். மேலும் வீரமணியின் உடலை கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அங்கு அவரது உடல் பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com