குளித்தலை, தோகைமலை ஒன்றியங்களில்  குடிநீர் திட்டப்பணிகளுக்கு பூமிபூஜை

கரூர் மாவட்டம், குளித்தலை, தோகைமலை ஆகிய ஒன்றியப் பகுதிகளுக்கு ரூ.52.75 கோடி மதிப்பிலான குடிநீர் திட்டப்பணிகளுக்கான

கரூர் மாவட்டம், குளித்தலை, தோகைமலை ஆகிய ஒன்றியப் பகுதிகளுக்கு ரூ.52.75 கோடி மதிப்பிலான குடிநீர் திட்டப்பணிகளுக்கான  பூமிபூஜையை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்ஆர்.விஜயபாஸ்கர் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.
ஆட்சியர் கு.கோவிந்தராஜ் தலைமையில் ரூ.52.75 மதிப்பிலான குடிநீர் திட்டப்பணி,ரூ.50 லட்சத்தில் நங்கவரம் பேரூராட்சிப் பகுதியில் அலுவலகக் கட்டடப் பணி ஆகியவற்றுக்கான பூமிபூஜையை தொடங்கி வைத்து போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியதாவது:   கரூர் மாவட்டம், குளித்தலை மற்றும் தோகைமலை ஒன்றியங்களைச் சேர்ந்த மக்கள் பயனடையும் வகையில், காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் ரூ.52.75 கோடியில் மேற்கொள்வதற்கான பூமிபூஜை போடப்பட்டுள்ளன. குளித்தலை ஒன்றியத்தில் உள்ள வதியம் குடியிருப்பு அருகில் காவிரியாற்றில் நீர்சேகரிப்பு கிணறு,டர்பைன் மின்மோட்டார் பொருத்தி 126 கி.மீ தொலைவுக்கு பிரதானக் குழாய்கள், 30 ஊராட்சிகளில் நீர்சேகரிப்புத் தொட்டிகள், புதிதாக அமைக்கப்பட உள்ள 6 மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள் உள்பட 244 மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள் ஆகியவற்றுக்கு பகிர்மானக் குழாய்கள் அமைத்து குடிநீர் விநியோக்கப்பட உள்ளது.  
குளித்தலை வட்டம்,சத்தியமங்கலம் ஊராட்சி செங்குளத்தில் 253 குடியிருப்புகள் பயன்பெறும் வகையில்,கிளை நீரேற்று குழாய்கள் மூலம் 284 கி.மீ தொலைவுக்கு நீர்கொண்டு செல்லும் பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தோகைமலை வட்டத்தில் 21,குளித்தலை ஒன்றியத்தில் 9 ஊராட்சிகள் என மொத்தம் 30 ஊராட்சிகள்  பயனடையும் என்றார். நிகழ்ச்சியில், குளித்தலை சட்டப்பேரவை உறுப்பினர் ராமர்,தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் என்.கண்ணன்,உதவி கோட்டப்பொறியாளர் முத்துமாணிக்கம்,வருவாய் கோட்டாட்சியர் சக்திவேல்,கூட்டுறவு சங்க நிர்வாகிகள் நெடுஞ்செழியன்,ஜெயராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com