தார்சாலை, சமுதாயக்கூடம் அமைக்க பூமிபூஜை

கரூர் மாவட்டத்தில் ரூ. 1.49 கோடி மதிப்பில் தார்சாலை மற்றும் சமுதாயக்கூடம் கட்டுவதற்கான பூமி பூஜையை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தார்.

கரூர் மாவட்டத்தில் ரூ. 1.49 கோடி மதிப்பில் தார்சாலை மற்றும் சமுதாயக்கூடம் கட்டுவதற்கான பூமி பூஜையை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தார்.
கரூர் ஒன்றியம், ஆண்டான்கோவில் மேற்கு சுந்தர் நகரில் சட்டப்பேரவை உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 20 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணிகளுக்கும், ஆண்டான்கோவில் மேற்கு அருள்நகரில் ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணிகளுக்கும் பூமி பூஜை நடைபெற்றது.
இதேபோல கரூர் நகராட்சிகுட்பட்ட வார்டு எண் 42-இல் முத்துக்கவுண்டன் புதூரில் சட்டப்பேரவை உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 23.50 லட்சம் மதிப்பீட்டில் முத்துக்கவுண்டன்புதூர் முதல் திருச்சி புறவழிச்சாலை வரை தார்சாலை அமைக்கும் பணிகளுக்கும், சுக்காலியூரில் ரூ. 22.50 லட்சம் மதிப்பீட்டில் சுக்காலியூர் காந்தி நகர் முதல் முத்துக்கவுண்டன்புதூர் வரை தார்சாலை அமைக்கும் பணிகளுக்கும், தாந்தோன்றி ஒன்றியம், காக்காவாடி ஊராட்சியில் பசுபதிபாளையத்தில் ரூ. 20 லட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம் கட்டுமானப் பணிகளுக்கும், காக்காவாடி அம்மையப்பன்கவுண்டன்புதூரில் ரூ. 4 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி கட்டடம் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளுக்கும், புத்தாம்பூர் ஊராட்சியில் தாய் திட்டத்தின் கீழ் ரூ. 9.40 லட்சம் மதிப்பில் குளம் புனரமைப்புப் பணிகளுக்கும் பூமி பூஜையை அமைச்சர் தொடக்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறுகையில், ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு கிராமப்புறங்களின் உள்கட்டமைப்பு வசதிகள், சாலை வசதிகள், நீர்நிலை மேம்பாடு ஆகியவை முக்கியப்பங்கு வகிக்கிறது.
இந்த பல்நோக்கு சிந்தனை அடிப்படையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் முதல்வர் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.
இந்த பணிகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உரிய காலத்திற்குள் வரும் என்றார்.
இந்நிகழ்ச்சியில், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் எம். கீதாமணிவண்ணன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, செயற்பொறியாளர் சடையப்பன், வட்டாட்சியர்கள் ராம்குமார் (மண்மங்கலம்), சக்திவேல் (கரூர்), வட்டார வளர்ச்சி அலுவலர் அன்புச்செல்வன், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் ஏ.ஆர். காளியப்பன், வை. நெடுஞ்செழியன், ஜெயராஜ், சிவசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com