மாவட்ட மைய நூலகத்தில் மின் இதழ்கள் இலவச சேவை தொடக்கம்

கரூர் மாவட்ட மைய நூலகத்தில் வாசகர்களின் பயன்பாட்டுக்காக மின் - இதழ்கள் இலவச சேவை சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

கரூர் மாவட்ட மைய நூலகத்தில் வாசகர்களின் பயன்பாட்டுக்காக மின் - இதழ்கள் இலவச சேவை சனிக்கிழமை தொடங்கப்பட்டது.
மின் இதழ் சேவையை தொடங்கிவைத்து போட்டி தேர்வு எழுதும் மாணவர்களிடையே மாவட்ட மைய நூலகர் செ.செ. சிவக்குமார் பேசியது: இந்த மின் - இதழ் சேவையானது கல்வி, இலக்கியம், கலை, பண்பாடு, அறிவியல் போன்ற 34 பிரிவுகளையும், 58 உலக மொழிகளையும் உள்ளடக்கிய வகையில் வடிவமைக்கப்பட்ட மின் - இதழ் வலைதளம் ஆகும்.
இந்த மின் - இதழ் படிக்கும் வசதியானது வாசகர்கள் பயன்பெறும் வகையில் இலவசமாக வழங்கப்படுகிறது. மின் - இதழ்கள் இலவச சேவையை வாசகர்கள், பொது மக்கள், போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்தி வரும் மாணவர்கள் ஆகியோர் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com