"நுகர்வோர் தங்களது புகார்களை செயலி மூலம் தெரிவிக்கலாம்'

நுகர்வோர் தங்களது புகார்களை செயலி மூலம் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் (பொ) ச. சூர்யபிரகாஷ் தெரிவித்துள்ளார்.

நுகர்வோர் தங்களது புகார்களை செயலி மூலம் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் (பொ) ச. சூர்யபிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
  சட்டமுறை எடையளவுகள் சட்டம் 2009 மற்றும் பொட்டல பொருள்கள் விதிகள் 2011-ன் கீழ் நுகர்வோர் நிவாரணம் பெறும் வகையில் தமிழக அரசு தொழிலாளர் நலத்துறை மூலம் டிஎன்-எல்எம்சிடிஎஸ் என்ற செயலி இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இச்செயலியை கணினி மற்றும் செல்லிடப்பேசியில் இலவசமாக நுகர்வோர்கள் பதிவிறக்கம் செய்து இச்செயலி மூலம் தங்களது புகார்கள் மற்றும் கருத்துக்களை தெரிவிக்கலாம்.
நுகர்வோர்கள் கடைகள் மற்றும் நியாயவிலைக்கடைகள், பெட்ரோல்பங்குகள், பிற இடங்களில் எடையிட்டு வாங்கும் பொருள்களின் அளவு குறைந்து காணப்பட்டாலோ, பொட்டலப்பொருள்களில் தயாரிப்பாளர், விற்பனையாளர், இறக்குமதியாளர் பெயர் மற்றும் முழு முகவரி, வாங்கும் பொருளின் பெயர், நிகர எடை, பொட்டலமிடப்பட்ட மாதம், வருடம் மற்றும் அறிவிக்கப்பட்ட விற்பனை விலை ஆகிய அறிவிப்புகள் இல்லாமல் இருந்தாலோ, அறிவிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக பொட்டல பொருள்களை விற்றாலோ இச்செயலி மூலம் புகார் அளிக்கலாம். புகார் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட தொழிலாளர் துறை அலுவலருக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதன் விவரமும் புகார்தாரருக்கு இச்செயலி மூலம் தெரிவிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com