புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை உருவாக்க நாடகம் மூலம் விழிப்புணர்வு

பள்ளிக் குழந்தைகளிடம் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கும் வகையில் கரூர் சேரன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் சங்கரன்கோவில் கலைக்குழுவினர் நாடகம் மூலம் விழிப்புணர்வை

பள்ளிக் குழந்தைகளிடம் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கும் வகையில் கரூர் சேரன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் சங்கரன்கோவில் கலைக்குழுவினர் நாடகம் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
பள்ளிக்குழந்தைகளிடம் வாசிப்பு பழக்கத்தை உருவாக்கிடும் வகையில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் பாரதி புத்தகாலயம் சார்பில் கோவை-கரூர் ஒரு லட்சம் குழந்தைகளை நோக்கி என்ற விழிப்புணர்வு பிரசார கலைக்குழுவினர் கோவையில் நவ.1- ஆம் தேதி பிரசாரத்தைத் தொடங்கினர்.
புதன்கிழமை கரூர் மாவட்டம் வந்தடைந்த குழுவினர், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களிடையே புத்தகம் வாசிப்பின் அவசியத்தை நாடகம், ஆடல், பாடல் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இப்பயணத்தின் நிறைவு விழா வெண்ணெய்மலை சேரன் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பள்ளித் தாளாளர் பி.எம்.கே.பாண்டியன் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத்தலைவர் தீபம்.சங்கர் வரவேற்றார். பள்ளி முதல்வர் வி.பழநியப்பன் துவக்க உரையாற்றினார்.
இணைச்செயலாளர் என்.சாகுல்அமீது, மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.
தொடர்ந்து சங்கரன்கோயில் தாமிரபரணி கலைக்குழுவினர் ஆடல், பாடல், நாடகங்கள் மூலம் புத்தகம் வாசிக்கும் பழக்கம் உருவாக்கும் வகையில் நடித்துக்காண்பித்தனர். விழாவில் பள்ளி மாணவ,,மாணவிகள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் திரளாக பங்கேறனர்.
முன்னதாக யாழ்ப்பாணத்தில் தமிழர்களின் நூலகம் சேதப்படுத்தப்பட்டதையடுத்து அந்நூலகத்திற்கு தமிழக அரசு சார்பில் புத்தகங்கள் வழங்கப்பட உள்ளதையடுத்து கரூர் மாவட்ட அறிவியல் இயக்கத்தினர் மாவட்டத்தலைவர் உ.தீபம்சங்கர்
தலைமையில் 1000 புத்தகங்களை மாவட்டக் கல்வி அதிகாரிகளிடம் வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com