முதல்வர் வருகைக்காக அகற்றப்பட்ட வேகத்தடைகள் மீண்டும் அமைப்பு

தமிழக முதல்வர் வருகைக்காக கரூரில் அகற்றப்பட்ட வேகத்தடைகள் அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தமிழக முதல்வர் வருகைக்காக கரூரில் அகற்றப்பட்ட வேகத்தடைகள் அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
கரூரில் கடந்த மாதம் 4 ஆம் தேதி எம்ஜிஆர் நூற்றாண்டு விழா திருமாநிலையூர் திடலில் நடைபெற்றது. இதில் பங்கேற்க திருச்சியிலிருந்து சாலை மார்க்கமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கரூர் வந்தார். இதற்காக கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டிருந்த வேகத்தடைகள் அகற்றப்பட்டன.
முதல்வர் கரூர் வந்து சென்று ஒரு மாதத்திற்கு மேலாகியும் அகற்றப்பட்ட வேகத்தடைகள் மீண்டும் அமைக்கப்படாததால் ஆங்காங்கே விபத்துகள் நடைபெற்றன.
இதையடுத்து தேசிய நெடுஞ்சாலைகளில் அகற்றப்பட்ட இடங்களில் வேகத்தடைகள் நெடுஞ்சாலைத்துறையினர் சார்பில் அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. கரூர் சுங்ககேட், தெரசா கார்னர் உள்ளிட்ட இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com