இதுவரையில் 12,621 பேருக்கு வெள்ளாடுகள் அளிப்பு

விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்தில் கரூர் மாவட்டத்தில் இதுவரை 12, 621 பேர் பயனடைந்துள்ளதாக ஆட்சியர் கு.கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.

விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்தில் கரூர் மாவட்டத்தில் இதுவரை 12, 621 பேர் பயனடைந்துள்ளதாக ஆட்சியர் கு.கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூர் மாவட்டத்தில் தமிழக அரசின் ஏழைகளுக்கான விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தில் கடந்த 6 ஆண்டுகளில் 12, 621 பயனாளிகளுக்கு தலா 4 ஆடுகள் வீதம் 50,484 ஆடுகள் வழங்கப்பட்டு, இதுவரை 97,196 குட்டிகளை ஈன்றுள்ளன. நடப்பு நிதியாண்டில் 2,929 பயனாளிகளுக்கு 4 ஆடுகள் வீதம் 11,716 ஆடுகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com