இரட்டை வாய்க்கால் தூர்வாரும் பணி ஆய்வு

கரூர் நகரில் உள்ள இரட்டை வாய்க்கால் தூர்வாரும் பணியை ஆட்சியர் கு. கோவிந்தராஜ் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கரூர் நகரில் உள்ள இரட்டை வாய்க்கால் தூர்வாரும் பணியை ஆட்சியர் கு. கோவிந்தராஜ் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் இரட்டைவாய்க்கால் தூர் வாரும் பணி மற்றும் செல்லாண்டிபாளையம், தாந்தோணி ஊராட்சி ஒன்றியம், வெள்ளியணை, சமத்துவபுரம் ஆகிய பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகளை ஆட்சியர் கு.கோவிந்தராஜ் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது: நகரின் மையப்பகுதி வழியாக செல்லக்கூடிய இரட்டை வாய்க்கால் கழிவுநீரை வெளியேற்றும் முக்கிய கால்வாயாக உள்ளது. இந்த வாய்க்காலின் காமராஜ் மார்க்கெட் பகுதியில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறாமல், அப்பகுதியில் பெரும் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதியினர் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, இரட்டை வாய்க்கால் தூர்வாரும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் குப்பைகள் மற்றும் பாலித்தீன் பைகள் போன்றவற்றை குப்பைத் தொட்டிகளில் மட்டுமே போட வேண்டும். கழிவுநீர் வாய்க்காலில் போடுவதால் அடைப்பு ஏற்படுவதோடு சுகாதார சீர்கேடு டக்கூடாது என்றார்.
பின்னர் தாந்தோணி ஊராட்சி ஒன்றியம், வெள்ளியணை சமத்துவபுரம் பகுதியை ஆய்வு மேற்கொண்ட அவரிடம் அப்பகுதி மக்கள் தெரு விளக்கு, குடிநீர் தடையின்றி வழங்க கோரிக்கை விடுத்தனர். உடனே சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கோரிக்கைகள் நிறைவேற்றித்தருமாறு உத்தரவிட்டார்.  தொடர்ந்து அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்தார். மேலும் அங்கு  சுகாதார மையம் சார்பில் நடைபெற்ற முகாமையும் பார்வையிட்டார்.
ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.கவிதா,  கரூர் நகராட்சி ஆணையர் ப. அசோக் குமார், வட்டாட்சியர் அருள்,  தாந்தோணி ஒன்றிய ஆணையர் பெ.கனகராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com