கரூரில் அனைத்து ஓய்வூதிய சங்கத்தினர் தர்னா

ஊதியக்குழு அலுவலர்களின் பரிந்துரைகளை வெளியிட வேண்டும் என்பனஉள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் வட்டாட்சியர் அலுவலகம்

ஊதியக்குழு அலுவலர்களின் பரிந்துரைகளை வெளியிட வேண்டும் என்பனஉள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர்கள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை  தர்னாவில் ஈடுபட்டனர்.
2016, ஜனவரி 1 முதல் 2017 செப்டம்பர் 30 ஆம் தேதி வரையிலான 21 மாத ஓய்வூதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், மத்திய அரசு வழங்கியது போன்று குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9000 வழங்க வேண்டும்,  தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச  ஓய்வூதியம் வழங்க வேண்டும், முதியோருக்கு இலவசப் பேருந்து பயணச்சலுகை வழங்க வேண்டும் என்பனஉள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பில் இந்த தர்னா நடைபெற்றது.
கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற தர்ணாவுக்கு மாவட்டத்தலைவர் து.சாமுவேல் சுந்தரபாண்டியன் தலைமை வகித்தார். துணைத்தலைவர்கள் அ.கோபால்சாமி, அ.ஜெயபால், எம்.சண்முகம் ர் முன்னிலை வகித்தனர்.  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத்தலைவர் மு.மகாவிஷ்ணன்  தொடக்கவுரையாற்றினார். மாவட்டச் செயலர் சக்திவேல், போக்குவரத்து ஓய்வூதியர் சங்கத்தைச் சேர்ந்த  ஏ.கந்தசாமி உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். தர்னாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.   மாவட்டப்பொருளாளர் அ.மோகன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com