எம்ஜிஆர் நூற்றாண்டு விழா: புகைப்படக் கண்காட்சி

கரூரில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா புகைப்படக் கண்காட்சி மற்றும் பல்துறை பணி விளக்க முகாம் அக். 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

கரூரில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா புகைப்படக் கண்காட்சி மற்றும் பல்துறை பணி விளக்க முகாம் அக். 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனை பொதுமக்கள் சென்று பார்வையிடலாம் என மாவட்ட ஆட்சியர் கு. கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கரூரில் புதன்கிழமை நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்படக் கண்காட்சி மற்றும் பல்துறை பணி விளக்க முகாம் நடைபெற்றது.
விழாவில் பங்கேற்காத கிராமப்புற பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க கண்காட்சியைப் பார்வையிடும் வகையில் இந்த கண்காட்சி வரும் 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.  கரூர் மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு விடியோ வாகனம் வாயிலாக குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எம்ஜிஆர் நடித்த முழுநீள சிறப்பு திரைப்படங்கள் நாள்தோறும் காண்பிக்கப்பட உள்ளது. இந்த அரிய வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com