கரூர் மாவட்டத்தில் காந்திஜெயந்திக்கு விடுமுறை அளிக்காத40 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

காந்திஜெயந்தி அன்று கரூர் மாவட்டத்தில் தொழிலாளர்களை பணியமர்த்திய 40 நிறுவனங்கள்மீது தொழிலாளர் நலத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

காந்திஜெயந்தி அன்று கரூர் மாவட்டத்தில் தொழிலாளர்களை பணியமர்த்திய 40 நிறுவனங்கள்மீது தொழிலாளர் நலத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
 இதுதொடர்பாக தொழிலாளர் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன்  வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கரூர் தொழிலாளர் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் பெரியசாமி, குமரக்கண்ணன், ஜோதிமாணிக்கம் ஆகியோர் காந்திஜெயந்தி அன்று
மாவட்டத்தில் தொழில்நிறுவனங்களில் கூட்டாய்வு நடத்தினர்.
அப்போது அரசு விடுமுறை தினத்தில் தொழிலாளர்களை வேலை செய்ய அனுமதிக்க கோரும் படிவத்தை ஆய்வாளருக்கு அனுப்பாமல் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திய  நிறுவனங்களுக்கு மோட்டார் போக்குவரத்து தொழிலாளர் சட்டப்படி 10 நிறுவனங்களை ஆய்வு செய்ததில் 3 முரண்பாடுகள் கண்டறியப்பட்டது.
இதுபோல 31 கடைகளை ஆய்வு செய்ததில் 16 முரண்பாடுகளும், 31 உணவகங்களில் ஆய்வுசெய்ததில் 21 முரண்பாடுகளும் கண்டறியப்பட்டு அந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com