புரட்டாசி கடைசி சனிக்கிழமை: பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு கரூர் தாந்தோன்றிமலை மற்றும் கோம்புபாளையம் பெருமாள் கோயில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.

புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு கரூர் தாந்தோன்றிமலை மற்றும் கோம்புபாளையம் பெருமாள் கோயில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.
தென்னகத் திருப்பதி என்றழைக்கப்படும் கரூர் தாந்தோன்றிமலை கல்யாண வெங்கட ரமண சுவாமி கோயில் புரட்டாசி தேர்த் திருவிழா கடந்த மாதம் 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 29-ஆம் தேதி திருக்கல்யாண உற்சவம், அக்.1-ஆம் தேதி திருத்தேரோட்டமும் நடைபெற்றது. தொடர்ந்து கல்யாண வெங்கட ரமண சுவாமி மற்றும் பூதேவி, ஸ்ரீதேவிக்கும் சிறப்பு வழிபாடுகள், வெங்கடரமண சுவாமி நாள்தோறும் கருட வாகனம், ஹனுமந்த வாகனம், முத்துப்பல்லக்கில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து புரட்டாசி மாதத்தின் கடைசி மற்றும் நான்காவது சனிக்கிழமையை முன்னிட்டு அக். 14 ஆம் தேதி சுவாமிக்கு அதிகாலையே சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல கரூர்மாவட்டம் கோம்புபாளையத்தில் உள்ள சீனிவாச பெருமாள் கோயிலிலும் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பக்தர்கள் காவிரி ஆற்றுக்குச் சென்று புனித நீராடி எடுத்து வந்த தீர்த்தக்குடங்களுடன் பூமிதேவி, நீலாதேவி மற்றும் சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com