ஜாக்டோ-ஜியோ போராட்டம்; 750 பேர் கைது

கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 750 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 750 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் 1.4.2013 முதல் தொடர அரசாணை பிறப்பிக்க வேண்டும், ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கான 8-வது ஊதிய மாற்றத்தை உடனடியாக ஏற்படுத்த வேண்டும். அதற்கு முன் ஓய்வூதிய மாற்றத்தில் உள்ள முரண்களைக் களைந்து சீரமைக்கப்பட்ட ஊதியத்தின் அடிப்படையில் 8-வது ஊதிய மாற்றம் ஏற்படுத்த வேண்டும். மேலும் தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியங்களை ரத்து செய்து வரையறுக்கப்பட்ட ஊதியத்தை நிர்ணயிக்க வேண்டும். தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள 8-வது ஊதியக்குழு மாற்றம் ஏற்படுத்தும் வரை 1.1.2016 முதல் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 7-ம் தேதி முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கத்தினர், சத்துணவு ஊழியர்கள் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த 3 நாள்களாக ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிடும் போராட்டம், காத்திருப்பு போராட்டம் நடத்தினர். வியாழக்கிழமை பாடை கட்டி, ஒப்பாரி வைக்கும் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
வெள்ளிக்கிழமை காலை அவர்கள் ஆட்சியரகம் முன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்ததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 750 பேரை போலீஸார் கைது செய்தனர். பின்னர் வரும் 21-ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் முன்னிலையில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு நிர்வாகிகள் பங்கேற்கும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதையடுத்து போராட்டத்தையும் கூட்டமைப்பினர் தாற்காலிகமாக வாபஸ் பெற்றனர். மேலும் கைதான ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை போலீஸார் பிற்பகலே விடுவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com