மியான்மரைக் கண்டித்து முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்

மியான்மரில் ரோஹிங்யோ முஸ்லிம்களை கொன்று குவிக்கும் மியான்மர் அரசின் விரோதப் போக்கை கண்டித்து கரூரில் முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மியான்மரில் ரோஹிங்யோ முஸ்லிம்களை கொன்று குவிக்கும் மியான்மர் அரசின் விரோதப் போக்கை கண்டித்து கரூரில் முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மியான்மர் நாட்டில் ரோஹிங்யோ முஸ்லிம்களை கொன்று குவிக்கும் மியான்மர் அரசைக் கண்டித்தும், இதற்கு குரல்கொடுக்காத ஆங்சான்சூயி மற்றும் மத்திய அரசைக் கண்டித்தும் கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் கரூர் நகர அனைத்து இஸ்லாமிய ஜமாஅத்தார்கள் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முத்தவல்லி ஜேபி. நாஸர் தலைமை வகித்தார்.
ஜாமியா மஸ்ஜித் இமாம் மௌலானா சையது இப்ராகிம்ஹஸனி கண்டன உரையாற்றினார்.
இதில் இந்திய நாடாளுமன்றத்தில் மியான்மர் அரசு மீது கண்டனத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மியான்மர் நாட்டு தூதரை அழைத்து இந்திய அரசு கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும். ஐநா பாதுகாப்பு சபையில் மியான்மர் அரசுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும். இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கும் ரோஹிங்யா முஸ்லிம்களை திருப்பி அனுப்பும் முடிவைக் கைவிட வேண்டும். மியான்மரில் பிரச்னைகள் தீரும் வரையில் அங்கிருந்து இந்தியா வந்திருக்கும் இந்து-முஸ்லிம் அகதிகளை திருப்பி அனுப்பக்கூடாது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மௌலானா ஈஎம். சுல்தான்ரஷாதி நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் இஸ்லாமியர்கள் திரளாக பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com