கரூர் அருகே கார் மோதி தொழிலாளி சாவு

கரூர் அருகே கார் மோதியதில் தொழிலாளி இறந்தார்.கரூர் மாவடியான் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மோகன் (53), கூலித் தொழிலாளி. இவர் வெள்ளிக்கிழமை கரூர் - திருச்சி சாலையில் புலியூர்

கரூர் அருகே கார் மோதியதில் தொழிலாளி இறந்தார்.
கரூர் மாவடியான் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மோகன் (53), கூலித் தொழிலாளி. இவர் வெள்ளிக்கிழமை கரூர் - திருச்சி சாலையில் புலியூர் சமத்துவபுரம் பகுதியில் நடந்துசென்றபோது பின்னால் வந்த கார் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். பசுபதிபாளையம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
லாரி உரிமையாளர்தூக்கிட்டு தற்கொலை
கடன் தொல்லையால் லாரி உரிமையாளர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். கரூர் மாவட்டம், கடவூரை அடுத்த வடவம்பாடியைச் சேர்ந்தவர் குணசேகர்(37). ஏமூரில் குடும்பத்துடன் வசித்துவந்த இவர் சொந்தமாக லாரிகளை வைத்து தொழில்நடத்தி வந்தார்.
இந்நிலையில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், கரூரில் உள்ள கல் குவாரியில் லாரிஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். இதனிடையே கடன் தொல்லையால் வாழ்க்கையில் விரக்தியடைந்த குணசேகர் வீட்டில் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து வெள்ளியணை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இருசக்கர வாகனம் மோதி முதியவர் சாவு
தோகைமலை அருகே சைக்கிள் மீது இருசக்கர வாகனம் மோதி முதியவர் இறந்தார். திருச்சி மாவட்டம், மேக்குடி கம்மங்கால் பகுதியைச் சேர்ந்தவர் மலையாளி (35). இவரது மனைவி அஞ்சலை (33). இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை தோகைமலை சென்றுவிட்டு மீண்டு திருச்சிக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர்.
திருச்சி-தோகைமலை சாலை புத்தூர்பிரிவு அருகே வந்தபோது எதிரே வந்த சைக்கிள் மீது இருசக்கர வாகனம் மோதியதில் சைக்கிளில் வந்த குளித்தலை கீழவெளியூரைச் சேர்ந்த பெருமாள்(59) சம்பவ இடத்திலேயே இறந்தார். இருசக்கர வாகனத்திலிருந்து விழுந்த தம்பதி காயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். புகாரின்பேரில் தோகைமலை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com