தாந்தோன்றிமலை பெருமாள் கோயிலில் புரட்டாசி திருவிழா கொடியேற்றம்

தென்திருப்பதி என்றழைக்கப்படும் கரூர் தாந்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோயில் புரட்டாசி திருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

தென்திருப்பதி என்றழைக்கப்படும் கரூர் தாந்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோயில் புரட்டாசி திருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
கரூர் தாந்தோன்றிமலை குடைவறைக் கோயிலில் பூதேவி, ஸ்ரீதேவியுடன் கல்யாண வெங்கடரமண சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். ஆண்டுதோறும் இக்கோயிலில் புரட்டாசி திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
நிகழாண்டிற்கான திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
விழாவில், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கோயில் இணைஆணையர் சி. கல்யாணி, உதவி ஆணையர்கள் ம. சூரியநாராயணன், நா. சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, வரும் 29-ம் தேதி கோயிலில் திருக்கல்யாண உற்சவமும், அக்.1-ம் தேதி திருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com