கரூரில் காவல்நிலையம் முன்பு ஆட்டோ ஓட்டுநர் தீக்குளிக்க முயற்சி

கரூரில் காவல் நிலையம் முன்பு ஆட்டோ ஓட்டுநர் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூரில் காவல் நிலையம் முன்பு ஆட்டோ ஓட்டுநர் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (50). ஆட்டோ ஓட்டுநர். இவர், அதே பகுதியில் உள்ள ஆட்டோ நிலையத்தில் கடந்த 15 வருடங்களாக ஆட்டோ ஓட்டி வருகிறாராம். இதே ஆட்டோ நிலையத்தில் திருமாநிலையூரைச் சேர்ந்த கோவிந்தராஜ் (40) என்பவரும் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில், திங்கள்கிழமை காலை சத்தியமூர்த்திக்கு வந்த சவாரியை அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 
இதில், விரக்தியடைந்த சத்தியமூர்த்தி, மண்ணெண்ணெய் கேனுடன் கரூர் நகர காவல்நிலையம்  சென்று அங்கு தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். இதைக்கண்ட அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸார், அவரை மீட்டு அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் கோவிந்தராஜையும் வரவழைத்து இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். சத்தியமூர்த்தி திடீரென காவல்நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com