வால்வு பழுதை சீரமைக்காததால் வீணாகும் குடிநீர்

கரூர் மாவட்டம், மரவாபாளையத்தில் காவிரி குடிநீர் திட்டக்குழாயின் வால்வு பழுதை சீரமைக்காததால், இரு மாதங்களாக

கரூர் மாவட்டம், மரவாபாளையத்தில் காவிரி குடிநீர் திட்டக்குழாயின் வால்வு பழுதை சீரமைக்காததால், இரு மாதங்களாக குடிநீர் வீணாய்ப்  போவதாக அப்பகுதியினர் புகார் தெரிவித்துள்ளனர்.
க.பரமத்தி,  பள்ளபட்டி, அரவக்குறிச்சி ஆகிய பேரூராட்சி பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், நொய்யல் அருகே மரவாபாளையத்தில் காவிரி ஆற்றில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் ரூ.41.90 கோடியில் வட்டைக்கிணறு,  நத்தமேட்டில் 1.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. 
இந்நிலையில், நத்தமேட்டை அடுத்த மரவாபாளையம் ரயில்வே பாதை அருகில் குடிநீர் குழாயில் ஏர்வால்வு பொருத்தப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக ஏர்வால்வின் அடிப்பகுதி சேதமடைந்தும் சீரமைக்காததால் கசிவின் வழியே,
நீரோடை போல் குடிநீர் வீணாகி அருகேயுள்ள தோட்டங்களுக்குச் சென்றது.  இதுகுறித்து தகவலறிந்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், மூன்று மாதத்திற்கு முன்பு பழுதான வால்வை சீரமைத்துச் சென்றனர். இந்நிலையில், தற்போது வால்வு மீண்டும் பழுதாகி குடிநீர் வீணாக வெளியேறிக் கொண்டிருக்கிறது. 
இதனால் பள்ளபட்டி, அரவக்குறிச்சி, பரமத்தி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. 
இதுதொடர்பாக அப்பகுதியினர் கூறியது: வால்வு சீரமைப்பு பணிக்கு பின்னர், தற்போது வால்வு மீண்டும் பழுதாகி இரு மாதங்களுக்கும் மேலாகிறது.  
இதுதொடர்பாக குடிநீர்வடிகால் வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 
எனவே மாவட்ட ஆட்சியர் விரைந்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே குடிநீர் வீணாகுவதைத் தடுக்க வேண்டும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com