குடிநீரைச் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்

கரூர் மாவட்டத்தில்  பொதுமக்கள் குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கரூர் மாவட்டத்தில்  பொதுமக்கள் குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் தற்போது நிலவும்  பருவக்கால வறட்சியால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. எனவே பொதுமக்கள் குடிநீரைத் தேவைக்குத் தகுந்தபடி சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். மாவட்டத்தில் பொதுமக்கள் குடிநீர் பிரச்னை தொடர்பாக புகார்களைப் பெற்று நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியரகத்தில் குடிநீர் விநியோகம் தொடர்பான கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறை காலை 8 முதல் இரவு 8 மணி வரை செயல்படுகிறது. எனவே பொதுமக்கள் தங்கள் குடிநீர் பிரச்னைகள் தொடர்பாக புகார்களைக் கட்டுப்பாட்டு அறையின் இலவச கட்டணமில்லா தொலைபேசி  எண் 1800 4255104 வாயிலாகவும், 04324- 255104 என்ற எண் வாயிலாகவும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com