1261 பேருக்கு ரூ.1.15 கோடியில் வேளாண் உபகரணம் வழங்கல்

நீர்வடிப்பகுதி மேலாண்மை  திட்டத்தில் 1, 261 பயனாளிகளுக்கு  ரூ.1 கோடியே ஒரு லட்சத்து பதினைந்தாயிரம் மதிப்பிலான உபகரணங்கள் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.

நீர்வடிப்பகுதி மேலாண்மை  திட்டத்தில் 1, 261 பயனாளிகளுக்கு  ரூ.1 கோடியே ஒரு லட்சத்து பதினைந்தாயிரம் மதிப்பிலான உபகரணங்கள் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம் க. பரமத்தி ஊராட்சி ஒன்றியம், காருடையாம்பாளையத்தில் ஏழை விவசாய கூலித்தொழிலாளர்களுக்கு வேளாண் உபகரணங்களை வழங்கி மேலும் அவர் கூறியது: 
நீர்வளம் குறைந்த பகுதிகளில் நீர்வடிப்பகுதி மேலாண்மை திட்டத்தின் கீழ், கரூர் மாவட்டத்தில் குறைந்த நீர் செலவில் காய்ச்சலும், பாய்ச்சலும் என்ற யுக்தியை பயன்படுத்தி "ஒரு மடங்கு உற்பத்தி செலவு, இரண்டு மடங்கு லாபம்' என்ற நோக்கோடு பல்வேறு தொகுப்புத்  திட்டங்களை தமிழக அரசு வழங்கி வருகிறது. 
நிகழாண்டில் கரூர் மாவட்டத்தில், 175 பயனாளிகளுக்கு தலா ரூ.24,000 மதிப்பில் மின் தையல் இயந்திரங்கள், 186 பயனாளிகளுக்கு தலா ரூ.11,500 மதிப்பில் தார்ப்பாய் வழங்கப்பட உள்ளது. 
விளைநிலங்களில் நீர்வள ஆதாரத்தை மேம்படுத்த 109 பயனாளிகளுக்கு தலா ரூ.16,500 மதிப்பில் 20 அடி நீளம் கொண்ட 18 எண்ணிக்கையிலான பி.வி.சி குழாய்கள் வழங்கப்பட உள்ளன.  முதற்கட்டமாக தலா 5 பயனாளிகளுக்கு புதன்கிழமை வழங்கப்பட்டுள்ளது. 
இதேபோல், 791 பயனாளிகளுக்கு தலா ரூ.2,500 மதிப்பில் கடப்பாரை 1, மண்வெட்டி 2, களைக்கொத்து 1, பிக்காஸ் 1 மற்றும் கதிர்அரிவாள் 2 ஆகியவை 20 பயனாளிகளுக்கு புதன்கிழமை வழங்கப்பட்டுள்ளது. 
மொத்தம் 1,261 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே ஒரு லட்சத்து பதினைந்தாயிரம் மதிப்பிலான உபகரணங்கள் வழங்கப்பட உள்ளது. முதற்கட்டமாக 25 நிலமில்லா ஏழை, எளிய விவசாயக் கூலிகளுக்கு ரூ.3 லட்சத்து பத்தாயிரம் மதிப்பிலான வாழ்வாதார உபகரணங்கள் மற்றும் வேளாண் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.  
நிகழ்ச்சியில் வேளாண் இணை இயக்குநர் பாஸ்கரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com