மார்ச் 1 முதல் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி 

மார்ச் 1 முதல் கரூர் மாவட்டத்தில் உள்ள 1,90,150 பசு மற்றும் எருமைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட உள்ளது.

மார்ச் 1 முதல் கரூர் மாவட்டத்தில் உள்ள 1,90,150 பசு மற்றும் எருமைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கு. கோவிந்தராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
தமிழகத்தில் 32 மாவட்டங்களில் உள்ள அனைத்து கிராம, குக்கிராமங்களில் தேசிய கோமாரி நோய் தடுப்பூசித் திட்டத்தின்  கீழ்  இதுவரை 13 சுற்று தடுப்பூசிப்பணி முடிந்துள்ளது. தற்போது மார்ச் 1 முதல் 21-ம் தேதி வரை கரூர் மாவட்டத்தின் அனைத்து கிராமங்களிலும் உள்ள 1,90,150  பசு, எருமைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி  போடப்பட உள்ளது.  இந்நோய்க்கான 1,92,000 டோஸ் ஊநீர் (வேசின்) அதற்கென உருவாக்கப்பட்ட குளிரூட்டும் அறையில் தயார் நிலையில் உள்ளது.  அங்கிருந்து ஒவ்வொரு கிராமத்திற்கும் தடுப்பூசி பணி மேற்கொள்ளப்படும் குறிப்பிட்ட நாளில், இத்தடுப்பூசி பணிக்கென ஏற்படுத்தப்பட்டுள்ள  குழுவினர் மூலம் ஒவ்வொரு கிராமத்திலும் தற்போது உள்ள கால்நடைகளைக் கணக்கிட்டு தடுப்பூசி போடப்படவுள்ளது. 
மேலும், இது தொடர்பாக கிராமப்புற விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்து கிராமங்களிலும் சனிக்கிழமை (பிப்.24) நடைபெற உள்ள கிராமசபைக் கூட்டத்தில் கிராம மக்கள் அனைவரும் பங்கேற்று கால்நடை மருத்துவர்கள் கூறும் அறிவுரைப்படி கால்நடைகளை குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட இடங்களுக்கு  அழைத்துச் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
கோமாரி நோயானது குறிப்பாக கலப்பின மாடுகளை அதிகம் தாக்கி கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதாரம்  மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்துகிறது. 
 இந்நோயால் இறப்பு குறைவாக இருந்தபோதிலும், கறவை மாடுகளின் பால் உற்பத்திக் குறைவு மற்றும் எருதுகளின் வேலைத்திறன் குறைவு, கறவை மாடுகளின் சினைப்பிடிப்பு தடைபடுவது, இளங்கன்றுகளின் இறப்பு போன்ற பாதிப்புகளால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. 
இந்நோய் பொதுவாக குளிர் மற்றும் பனிக்காலங்களில் நோய் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து கால்நடைகளை வாங்கி வருதல், சுகாதாரமற்ற கால்நடை வளர்ப்பு மற்றும் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடாமல் இருத்தல் ஆகிய காரணங்களால் விரைவாக காற்றின்மூலம் பரவும் தன்மை கொண்டது.  மேலும், இந்நோய் பாதிக்கப்பட்ட மாடுகளின் சிறுநீர், பால், உமிழ்நீர் சாணம் ஆகியவற்றால் மற்ற கால்நடைகளுக்கு பரவுகிறது.  
எனவே, கரூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது பசுக்கள், எருதுகள், எருமைகள் மற்றும் மூன்று மாதத்திற்கு மேற்பட்ட இளங்கன்றுகளுக்கு மார்ச் 1 முதல் 21-ம் தேதி முடிய ஒவ்வொரு கிராமத்திலும் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட இடத்தில் தடுப்பூசி குழுவினர் வரும்போது தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com