போக்குவரத்து தொழிலாளர்கள் கொண்டாட்டம்
By DIN | Published on : 13th January 2018 02:37 AM | அ+அ அ- |
கரூரில் போக்குவரத்து தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை காலை பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினர்.
போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு சம்பந்தமான சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பையொட்டி விளக்கக் கூட்டம் வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு கரூர் போக்குவரத்து பணிமனை முன் நடைபெற்றது.
தொமுச கரூர் மாவட்டச் செயலர் மா. கண்ணதாசன் தலைமை வகித்தார். ஐஎன்டியுசி சங்க மாநில நிர்வாகி அம்பலவாணன், சிஐடியு சங்க மாவட்டத் தலைவர் ஜி. ஜீவானந்தம், மாவட்டச் செயலர் சி. முருகேசன் ஆகியோர் நீதிமன்ற தீர்ப்பு குறித்து விளக்கினர்.
சிஐடியு சங்க மாவட்ட நிர்வாகிகள் கந்தசாமி, கிருஷ்ணமூர்த்தி, கந்தசாமி, போக்குகுவரத்து சங்க (சிஐடியு) தலைவர்கள் பாலசுப்பிரமணியன், சிவராமன் மற்றும் கூட்டமைப்பின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
முன்னதாக கூட்டத்தில் கலந்து கொண்டதொழிலாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து இதே ஒற்றுமையுடன் செயல்படும் உறுதியுடன் பணிக்குச் சென்றனர்.