"திருச்சி - ஈரோடு  மின் பாதையில் அடுத்த மாதம் ரயில்கள் இயக்கம்'

புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஈரோடு - திருச்சி ரயில் மின்பாதையில் பிப்ரவரி முதல் ரயில்கள் இயக்கப்படும் என்றார் தெற்கு ரயில்வே தலைமைப் பொறியாளர் (மின்சாரம் வழங்கல்) ராமசுப்பு.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஈரோடு - திருச்சி ரயில் மின்பாதையில் பிப்ரவரி முதல் ரயில்கள் இயக்கப்படும் என்றார் தெற்கு ரயில்வே தலைமைப் பொறியாளர் (மின்சாரம் வழங்கல்) ராமசுப்பு.
நிறைவுற்ற ஈரோடு - கரூர் -  திருச்சி ரயில் மின்பாதை பணிகளை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தபோது கரூர் ரயில் நிலையத்தில் அவர் மேலும் கூறியது:
ஈரோடு- கரூர் - திருச்சி வரை 141கி.மீ. தொலைவுக்கு ரூ. 141 கோடியில் ரயில்பாதை மின்மயமாக்கும் பணிகள் நிறைவுற்றுள்ளன. இப்பணிகளை தற்போது ஆய்வு செய்துள்ளோம். மேலும் இப் பணிகளை அடுத்த வாரம் ரயில்வே பாதுகாப்பு ஆணையர்  ஆய்வு செய்த பின்னர் பிப்ரவரி மாதத்தில் இந்த மின்பாதையில் ரயில்கள் இயக்கப்படும். அடுத்தகட்டமாக கரூர், திண்டுக்கல், சேலம் இடையே மின்பாதை அமைக்கப்படும். இதற்காக புகழூர், வெள்ளியணை, பேட்டைவாய்த்தலை, நாமக்கல் ஆகிய பகுதிகளில் துணைமின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. 
புதிய மின்பாதை அமைக்கப்பட்ட பகுதிகளில் மழைக் காலங்களில்  செல்போனில் பேசிக்கொண்டு நடப்பதையோ,  தண்டவாளத்தை கடப்பதையோ, போராட்டத்தின்போது கொடிக்கம்புகளை தூக்கியவாறு பங்கேற்பதையோ பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். இதுதொடர்பாக விரைவில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம் என்றார் அவர். 
இவருடன் தலைமைத் திட்ட இயக்குநர் நாகேந்திரபிரசாத், துணை தலைமை பொறியாளர் ஜான்சன், முதுநிலை எலக்ட்ரிக்கல் பொறியாளர் பிரபாகரன் ஆகியோர் ஈரோட்டில் இருந்து கரூர் வரை நிறைவுற்ற மின் பாதை பணிகளை ஆய்வு செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com