வரத்து குறைவால் வாழைத்தார் விலை உயர்வு!

பொங்கல் பண்டிகைக்கு கரூர் சந்தைக்கு வாழைத்தார் வரத்து குறைந்து போனதால் அதன் விலை மூன்று மடங்காக விற்கப்பட்டது. இதனால் நுகர்வோர் அதிர்ச்சியடைந்தனர்.

பொங்கல் பண்டிகைக்கு கரூர் சந்தைக்கு வாழைத்தார் வரத்து குறைந்து போனதால் அதன் விலை மூன்று மடங்காக விற்கப்பட்டது. இதனால் நுகர்வோர் அதிர்ச்சியடைந்தனர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை அன்று பொங்கல் படையலிடும்போது முக்கிய இடத்தை பிடிப்பது வாழைப்பழம். பொதுவாக கரூர் காமராஜர் மார்க்கெட் வாழை மண்டிக்கு கரூர் மாவட்டத்தில் வேலாயுதம்பாளையம், புகழூர், நெரூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம், லாலாபேட்டை திண்டுக்கல், தூத்துக்குடி, ஆந்திரம், கர்நாடக மாநிலங்களில் இருந்தும் வாழைத்தார் கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்படுகிறது.
இந்நிலையில் நிகழாண்டில் கரூர் சந்தைக்கு பொங்கலை முன்னிட்டு வெள்ளிக்கிழமை வாழை வரத்து குறைந்து போனதால் அவற்றின் விலை மூன்று மடங்கு உயர்ந்துள்ளதால் நுகர்வோர் விரக்தியடைந்தனர்.
இதுதொடர்பாக கரூர் வாழை மண்டி வியாபாரி முருகசுந்தரம் கூறியது: கரூர் சந்தைக்கு பொங்கல் பண்டிகைக்கு தூத்துக்குடி, திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து அதிகளவில் ரஸ்தாளி, பச்சைநாடன் போன்ற பழங்கள் கரூர் சந்தைக்கு கொண்டுவரப்படும். இந்த ஆண்டு ஒக்கி புயலால் அந்த மாவட்டங்களில் அதிகளவில் வாழை சேதமடைந்ததால் நிகாண்டு கரூர் சந்தைக்கு வரத்து முற்றிலும் நின்றுவிட்டது. ஆந்திர மாநிலத்தில் இருந்து பச்சைநாடனும் வரவில்லை. இதனால் உள்ளூர் மாவட்டத்தில் இருந்து பூவன், கற்பூரவல்லி மட்டும் வந்தன. கடந்தாண்டு 30,000 வாழைத்தார்கள் வந்தன. ஆனால் நேற்று 10,000 தார்கள் மட்டுமே வந்தன. இதனால் கடந்தாண்டு ரூ.400-க்கு ஏலம் போன ஒரு தார் பூவன் சனிக்கிழமை ரூ.1100 வரை போனது. இதேபோல கடந்தாண்டு ரூ.300 வரை விலை போன கற்பூரவல்லி, இந்த ஆண்டு ரூ.650 வரை ஏலம் போனது. விலை அதிகமாக இருந்ததால் வியாபாரிகளும் அதிகளவில் வாங்கிச் செல்லவில்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com