பயனற்ற கட்டடங்களை  சீரமைக்க ஆய்வு

கரூர் ஒன்றியப் பகுதிகளில் பயனற்ற கட்டடங்களை  புனரமைத்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.  

கரூர் ஒன்றியப் பகுதிகளில் பயனற்ற கட்டடங்களை  புனரமைத்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.  
மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் முன்னிலையில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் கரூர் ஒன்றியப்பகுதிகளான, சோமூர் மற்றும் அச்சமாபுரம் சமுதாயக்கூடத்தில் பழுதடைந்த கட்டடங்களை பார்வையிட்ட அவர்,  மிகவும் பழுதான பகுதிகளை இடித்து புதிய கட்டடங்கள் கட்டவும், கழிவறைகள் அமைக்கவும், உள்பகுதி தரையில் பேவர் பிளாக் கற்கள் பதித்து பொதுமக்கள் பயன்படுத்தும் வகையிலான சமுதாயக்கூடமாக மாற்ற நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
சோமூர் பள்ளி மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடி நன்கு பயின்று வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடையுமாறு அறிவுறுத்திய, அவர் தொடர்ந்து, நெரூர் தென்பாகம்  அரங்கநாதன்பேட்டையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருக்கும் பயன்பாடற்ற கட்டடங்களை புனரமைத்து பொதுமக்களின் கோரிக்கையின்படி, அவ்விடத்தில் நியாய விலைக்கடை, அஞ்சல் அலுவலகம், நூலகம்  அமைக்க வரைபடம் தயார் செய்துதர பொதுப்பணித்துறை கட்டடப் பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.  
ஆய்வு செய்த பகுதிகளில் பொதுமக்களைச் சந்தித்து, அவர்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார்.
ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் எஸ். கவிதா, வருவாய்க் கோட்டாட்சியர் கு. சரவணமூர்த்தி, செயற்பொறியாளர் சடையப்பன், கூட்டுறவுச் சங்கப் பிரதிநிதிகள் எஸ்.திருவிகா, பி. மார்க்கண்டேயன், இன்ஜினியர் கமலக்கண்ணன் மற்றும் அதிமுக பிரமுகர் தானேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com