இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் ரத்த பரிசோதனை, மரக்கன்று வழங்கல்

கரூர் மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்றும் வகையிலும், பொதுமக்களிடையே சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் கரூரில் இந்தியன் ஆயில் நிறுவனம் மற்றும் அரவிந்த் ஏஜென்சி சார்பில்

கரூர் மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்றும் வகையிலும், பொதுமக்களிடையே சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் கரூரில் இந்தியன் ஆயில் நிறுவனம் மற்றும் அரவிந்த் ஏஜென்சி சார்பில் சனிக்கிழமை பொதுமக்களுக்கு இலவச ரத்த பரிசோதனை முகாம், மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
இந்தியன் ஆயில் நிறுவன கரூர் விற்பனை அதிகாரி கே.வி. நாராயணன் தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ ஏ.ஆர். மலையப்பசாமி முன்னிலை வகித்தார். அரவிந்த் ஏஜென்சியின் குகன்ராம் வரவேற்றார். நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு இலவச ரத்த பரிசோதனை முகாம் நடைபெற்றது. தொடர்ந்து பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்ப தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு பரிசுப்பொருட்களும், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன. பின்னர் மாவட்டத்தை பசுமை மாவட்ட மாற்றும் வகையில் பொதுமக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரி கிருஷ்ண சைதன்யா, ஷோபிகா இம்பெக்ஸ் உரிமையாளர் சிவசாமி, யூனியன் வங்கி மேலாளர் அருண், சக்தி டீசல்ஸ் பரமசிவம் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்தியன் ஆயில் டீலர்களும் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com