தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு: தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை இணையதளத்தில் இருந்து வரும் 28 முதல் பதிவிறக்கம் செய்யலாம் என கரூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை இணையதளத்தில் இருந்து வரும் 28 முதல் பதிவிறக்கம் செய்யலாம் என கரூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன அலுவலகம் தெரிவித்துள்ளது.
தொடக்கக் கல்வி பட்டயத்தேர்வு இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு வரும் ஜூன் 4 முதல் 20 வரையிலும், முதலாமாண்டு மாணவர்களுக்கு ஜூன் 5 முதல் 21 வரையிலும் தேர்வுகள் நடைபெற உள்ளது. இத்தேர்விற்கு வரும் தனித்தேர்வர்கள் மற்றும் சிறப்பு அனுமதி திட்டத்தின் (தட்கல்) கீழ் விண்ணப்பத்திருக்கும் தனித்தேர்வர்கள் அனைவரும் இணையதளம் மூலம் தங்களின்
விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிந்து வரும் 28 ஆம் தேதி மதியம் முதல் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுக்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com