பேரிடர்கால மீட்பு பணிகள் ஒத்திகை

தாந்தோணி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் பேரிடர் கால மீட்புப் பணிகள் குறித்து மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. 

தாந்தோணி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் பேரிடர் கால மீட்புப் பணிகள் குறித்து மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. 
கரூர் தாந்தோணிமலை அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை சர்வதேச பேரிடர் குறைப்பு நாளையொட்டி  நடைபெற்ற பேரிடர் கால மீட்பு பணிகள் ஒத்திகையை  ஆட்சியர் த. அன்பழகன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் அவர் மேலும் கூறியது: 
இயற்கை சீற்றம், பேரழிவு போன்ற இடர்மிகுந்த காலங்களில் உயிர் மற்றும் பொருட்சேதம் அதிகளவில் ஏற்படுகிறது.  அக்கால கட்டங்களில் தங்களால் இயன்ற வரை தங்களை காத்துக்கொள்ளும் வகையில் இப்பயிற்சி அளிக்கப்படுகிறது.  இயற்கை பேரிடரான சுனாமி, நிலநடுக்கம், வெள்ளம், தீ விபத்து, பஞ்சம், பருவமழையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கல்லூரி மாணவ, மாணவிகள் நாட்டுநலப்பணித்திட்ட மாணவ, மாணவிகள், சாரணர் இயக்கம், செஞ்சிலுவை சங்கம், அலுவலர்கள், பணியாளர்கள் போன்றவர்களுக்கு தங்களை பாதுகாத்துக்கொள்ள திட்டமிடல், தேடுதல், மீட்டல் போன்றவைகளுக்காகவும் பயிற்சி மற்றும் மாதிரி ஒத்திகையின் மூலம் தெரிவிக்கப்படுகிறது.  பேரிடர் காலங்களில் பொதுமக்களைக் காப்பாற்றுவதில் வருவாய் நிர்வாகத்தோடு இணைந்து பணியாற்றுவதில் தீயணைப்பு பேரிடர் மேலாண்மை துறை மிகுந்த பங்கு வகிக்கிறது.  இத்தகைய சேவை பணிகளை பொதுமக்கள் பேரிடர் காலங்களில் பயன்படுத்தி சேதங்களை தவிர்க்கலாம் என்றார். 
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி அலுவலர் கணேசன், வருவாய் கோட்டாட்சியர் கு.சரவணமூர்த்தி,  பேரிடர் மீட்பு வட்டாட்சியர் வேலுச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com