விதை பரிசோதனை நிலையத்தில் இணை இயக்குநர் திடீர் ஆய்வு

கரூர் திண்ணப்பா நகரில் உள்ள விதை பரிசோதனை நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகளை

கரூர் திண்ணப்பா நகரில் உள்ள விதை பரிசோதனை நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகளை கோவை விதைச்சான்று இணை இயக்குநர் அ.செல்வராஜன் அண்மையில் (அக்.11) திடீரென ஆய்வு செய்தார்.
கரூர் விதை பரிசோதனை நிலையத்தில் விதைகளின் தரத்தை நிர்ணயிக்கக்கூடிய முக்கிய காரணிகளான முளைப்புத்திறன், ஈரப்பதம், புறத்தூய்மை மற்றும் பிற ரக கலப்பு ஆகியன எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பது குறித்தும் அதற்குரிய உபகரணங்களின் பயன்பாடுகள் பற்றியும் ஆய்வு மேற்கொண்ட இணை இயக்குநர்,  ஆய்வகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் சான்றுவிதை மாதிரி பதிவேடு, ஆய்வாளர் விதை மாதிரி பதிவேடு ஆகிய பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகின்றனவா என்பது குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார். 
மேலும், தேசிய வேளாண்மை திட்டம் 2017-18ன் கீழ் பெறப்பட்ட உபகரணங்கள் மற்றும் கருவிகள், அவற்றின் செயல்பாடுகளைப் பார்வையிட்ட பின்னர் அவர் மேலும் கூறியது:  
கரூர் விதை பரிசோதனை நிலையத்தில் இதுவரை 1,339 விதை மாதிரிகள் பெறப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டு ஆய்வறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளது. 
இந்நிலையத்தில் சான்று விதை, ஆய்வாளம் விதை மற்றும் பணிவிதை மாதிரிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு உடனுக்குடன் ஆய்வு அறிக்கைகள் உரியவருக்கு காலத்தே அனுப்பி வைக்கப்படுகிறது என்ற விவரம் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையத்தில் விதை முளைப்புதிறனுக்கென்று தனிஅறை உள்ளது. கிடைக்கப்பெற்றுள்ள விதை மாதிரிகளிலிருந்து முளைப்புத்திறன் கணக்கிடும் முறையில் இயல்பான நாற்று, இயல்பற்ற நாற்று, கடினவிதை மற்றும் உயிர்ப்பற்ற விதைகள் பகுப்பாய்வு செய்யும் முறை இங்கு சிறப்பாக செய்யப்படுகின்றது. குளிர்பதன வசதியுடன் கூடிய விதை மாதிரிகள் காப்பு அறையும் இங்கு உள்ளது.
இந்நிலையத்திற்கு வரும் விதைமாதிரிகளை சீரிய முறையில் பகுப்பாய்வு செய்து நல்ல விளைச்சலுக்கு விவசாயிகள் நலன் கருதி தரமான விதைகளே விவசாயிகளுக்கு கிடைக்கும் வகையில் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என்றார். 
 ஆய்வின்போது, கரூர் விதை ஆய்வுத்துணை இயக்குநர் க.சேகர், கரூர் விதைச்சான்று உதவி இயக்குநர் சு.துரைசாமி, விதைப்பரிசோதனை நிலையத்தின் வேளாண்மை அலுவலர்கள் பூ.வசந்தா, துர்காதேவி மற்றும் சி.பத்மா ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com