மத்திய அரசுடன் சேர்ந்து கொண்டு தமிழக அரசைக் கவிழ்க்க திமுக முயற்சி

மத்திய அரசுடன் சேர்ந்து கொண்டு தமிழக அரசைக் கவிழ்க்க திமுக முயற்சிக்கிறது என்றார் மக்களவை துணைத் தலைவர் மு. தம்பிதுரை. கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை

மத்திய அரசுடன் சேர்ந்து கொண்டு தமிழக அரசைக் கவிழ்க்க திமுக முயற்சிக்கிறது என்றார் மக்களவை துணைத் தலைவர் மு. தம்பிதுரை. 
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் முகாமில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியது: 
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்குக் காரணம் முந்தைய காங்கிரஸ் மற்றும் தற்போதைய மத்திய பாஜக அரசின் தவறானகொள்கை முடிவுகள்தான். இதனை அதிமுக அரசு வன்மையாகக் கண்டிக்கிறது. சிபிஐ சோதனை மூலம் அதிமுக அரசை அச்சுறுத்த முடியாது. தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது வேண்டுமென்றே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கிறார். 
அவர் மீதான குற்றச்சாட்டில் எந்த முகாந்திரமும், உண்மையும் இல்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இதுபோல் செய்கிறார்கள். அமைச்சர் மீதான குற்றச்சாட்டில் ஆதாரம் இருந்தால் இந்த அரசு நடவடிக்கை எடுக்கும். தமிழக பாஜக தலைவர்கள் திமுகவுடன் கூட்டணி அமைக்க முயற்சிக்கிறார்கள். பாஜகவுக்கும் திமுகவுக்கும் ரகசிய உடன்பாடு உள்ளது. 
கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு பாஜக தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் ஓ. பன்னீர்செல்வம் அதிமுகவிற்கு அழைப்பு விடுத்தால் பரிசீலிப்போம் என சொன்ன பின்னரும் எங்களை அழைக்கவில்லை. இப்படி ஒருபுறம் உடன்பாட்டை வைத்துக்கொண்டு பாஜக ஆட்சியை வீழ்த்துவேன் என திமுக தீர்மானம் நிறைவேற்றுவது இரட்டை வேடம்.
போலீஸ் உயர் அதிகாரி ஜார்ஜ் பதவியில் இருந்தபோதே குட்கா பிரச்னையில் வெளிப்படையாக தைரியமாக சொல்லி இருந்தால் பாராட்டுவேன். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக அரசை கவிழ்க்க வேண்டும் என ஒன்றரை ஆண்டுகளாக மு.க. ஸ்டாலின் பல்வேறு சாகசங்களைச் செய்துவருகிறார். இவற்றையெல்லாம் மக்கள் நம்ப மாட்டார்கள். சிபிஐ சோதனையால் அதிமுகவின் இமேஜ் கெடவில்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com