தீபாவளிக்கு தற்காலிக பட்டாசு கடை வைக்க  உரிமம் பெற அழைப்பு

தீபாவளிப் பண்டிகைக்கு தற்காலிக பட்டாசு கடை வைக்க விரும்புவோர்  உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

தீபாவளிப் பண்டிகைக்கு தற்காலிக பட்டாசு கடை வைக்க விரும்புவோர்  உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான செய்திக்குறிப்பு: 
நவ.6 (செவ்வாய்க்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையின்போது கரூர் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க உரிமம் பெற விரும்புவோர் கீழ்காணும் விதிகளை கடைபிடித்து வரும் 28-ம் தேதிக்குள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் செய்வோர்  வெடிமருந்து சட்டம் 1884 மற்றும் வெடிமருந்து விதிகள் 2008-ல் உள்ள விதி 84-ஐ முறையாக கடைப்பிடித்து  பொதுமக்களுக்கு சிரமம் இல்லாமல் பாதுகாப்பான இடமாகத் தேர்வு செய்து ஆட்சேபணை இல்லாத இடத்திற்கு மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு முந்தைய காலங்களில் தற்போது தேர்ந்தெடுத்துள்ள இடத்தில் கடை வைக்க உரிமம் பெற்றவர்கள் தற்போதைய விண்ணப்பத்துடன் அப்போது பெற்ற உரிம  நகலுடன் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும்போது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களின் பிரதிகள் - 5, கடையின் வரைபடம், மனுதாரரின்  பாஸ்போர்ட் அளவுள்ள வண்ண புகைப்படங்கள் - 2, மனுதாரர் உரிமம் கோரும் இடத்தின் உரிமையாளராக  இருப்பின் அதற்கான ஆவணங்கள் மற்றும் நடப்பு நிதி ஆண்டில் வீட்டு வரி ரசீது செலுத்திய நகல், உரிமம் கோரும் இடம் வாடகை கட்டடம் எனில், இடத்தின் பத்திர நகல் மற்றும் வீட்டு வரி செலுத்திய ரசீது நகலுடன் கட்டிட உரிமையாளரிடம் ரூ.20-க்கான முத்திரை தாளில் பெறப்பட்ட அசல் வாடகை ஒப்பந்தப்பத்திரம் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.  
விண்ணப்பங்களை அரசு உத்தரவின்படி வரும்  28-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் கொடுக்க வேண்டும். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு அக். 20-ம் தேதிக்குள் பட்டாசு உரிமம் புதுப்பித்தல் வழங்கப்படும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com