காவிரி குடிநீர்: சீரமைப்புப் பணி தீவிரம்

சணப்பிரட்டி பகுதிக்கான காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட பணியில் ஏற்பட்ட பழுதுகள் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர்


சணப்பிரட்டி பகுதிக்கான காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட பணியில் ஏற்பட்ட பழுதுகள் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் தெரிவித்தார்.
கிருஷ்ணராயபுரத்தை அடுத்த கட்டளை காவிரி ஆற்றுப்பகுதியில் கரூர் நகராட்சிக்குள்பட்ட சணப்பிரட்டிக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்குவதில் ஏற்பட்ட பழுதுகள் நீக்கும் பணியை சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியர் கூறியது: கரூர் நகராட்சிக்குள்பட்ட சணப்பிரட்டி பகுதியிலுள்ள 33 முதல் 36 வரையுள்ள வார்டு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கான காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது குடிநீர் எடுத்துச்செல்லும் குழாய்கள், மின் பாதைகள் கடுமையாக சேதம் ஏற்பட்டுள்ளது.
அதை சரிசெய்வதற்காக போர்க்கால அடிப்படையில் இரவு, பகலாக பணிகள் நடைபெற்று வருகிறது. ஆற்றில் தற்போது தண்ணீர் சென்று கொண்டிருப்பதால் குழாய்கள் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ள சிரமம் ஏற்பட்டது. இருப்பினும் அடுத்த இரு தினங்களில் பணிகள் நிறைவுற்று குடிநீர் விநியோகம் நடைபெறும். வரும் காலங்களில் காவிரியில் வெள்ள நீர் அதிகம் செல்லும்போது குடிநீர் பாதைகள் பாதிக்கப்படாமல் இருக்க சிறிய அளவிலான உயர்மட்ட பாலங்கள் அமைத்து, அதன் மேல் குடிநீர் குழாய்கள் அமைத்து நிரந்தர தீர்வு ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் ஆட்சியர் த.அன்பழழகன்.
ஆய்வின்போது, நகராட்சி ஆணையர் செந்தில்முருகன், பொறியாளர் ராஜேந்திரன், உதவி பொறியாளர் நக்கீரன், வட்டார வளர்ச்சி அலுவலர் புவனேஸ்வரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com