அண்ணா பிறந்தநாள் குதிரைவண்டி எல்கை பந்தயம்

கரூரில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற குதிரை வண்டி எல்கை பந்தயத்தில்  திருச்சி குதிரைகள் முதல், இரண்டாமிடம் பிடித்தன.

கரூரில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற குதிரை வண்டி எல்கை பந்தயத்தில்  திருச்சி குதிரைகள் முதல், இரண்டாமிடம் பிடித்தன.
தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 110-வது பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்ட  எம்ஜிஆர் இளைஞரணி சார்பில் கரூரை அடுத்த பள்ளபாளையத்தில் குதிரை வண்டி எல்கை பந்தயம் போட்டி  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. போட்டியில் திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 10 பெரிய குதிரைகள் பங்கேற்றன. பள்ளபாளையத்தில் தொடங்கி அணைப்பாளையம் வரை சென்று மீண்டும் பள்ளபாளையத்தை அடையும் வகையில் 10 கி.மீ. தூரத்திற்கு பந்தய எல்லை நிர்ணயிக்கப்பட்டது. 
போட்டியை கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ எம். கீதாமணிவண்ணன்  தொடக்கி வைத்தார். போட்டியில் பங்கேற்ற குதிரைகள் சாலையில் சீறிப்பாய்ந்தன. 
போட்டியில், திருச்சி சமயபுரத்தைச் சேர்ந்த மாரியம்மன் என்ற குதிரையை ஓட்டி வந்த வினோத் முதல் பரிசையும்,திருச்சி மாவட்டம் உறையூர் பகுதியை சேர்ந்த உதயசூரியன் என்ற குதிரையை ஓட்டி வந்த சாகுல் அமீது இரண்டாவது பரிசையும், தஞ்சாவூர் பேராவூரணியைச் சேர்ந்த ருத்ரா என்ற குதிரையை ஓட்டி வந்த வடிவேல் மூன்றாவது பரிசையும் வென்றனர். 
வென்றோருக்கு கரூர் மாவட்ட அதிமுக அவைத்தலைவர் காளியப்பன் முதல் பரிசாக ரூ.10,000, கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ  எம். கீதாமணிவண்ணன் இரண்டாவது பரிசாக ரூ. 7,000,  முன்னாள் மாவட்டச் செயலர் என்.எஸ். கிருஷ்ணன் மூன்றாவது பரிசாக ரூ.5,000 வழங்கி வாழ்த்தினர். விழாவில்  க. பரமத்தி ஒன்றியச் செயலர்கள் பி.மார்கண்டேயன், பொன். சரணணன் உள்ளிட்ட அதிமுகவினர் திரளாக பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com