மாநில அளவிலான எறிபந்து போட்டிகள் தொடக்கம்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே மாநில அளவிலான எறிபந்து போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே மாநில அளவிலான எறிபந்து போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.

தமிழ்நாடு கை எறிபந்து சங்கம் மற்றும் பெரம்பலூர் மாவட்ட எறிபந்து சங்கம் சார்பில் மாநில அளவிலான ஜூனியர் மாணவ, மாணவிகளுக்கான கை எறிபந்து போட்டி, குன்னம் அருகேயுள்ள எல்,பி.கே. விஸ்டம் மெட்ரிக் பள்ளியில் தொடங்கியது.

தொடக்க விழாவுக்கு பள்ளி தலைமை நிர்வாகி ஜீயாவுதின் தலைமை வகித்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் ராமசுப்ரமணிய ராஜா முன்னிலை வகித்தார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சோனல் சந்த்ரா, விளையாட்டு போட்டியை தொடக்கி வைத்தார். பெரம்பலூர், திருச்சி, கரூர், ஈரோடு, அரியலூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, நாகை, கடலூர், விழுப்புரம், சென்னை, வேலூர், திருவள்ளுர், கோவை, காஞ்சிபுரம், திருவாரூர், திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் இருந்து 20 ஆண்கள் அணியும், 15 பெண்கள் அணியும் பங்கேற்கின்றன.

போட்டியில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை (ஆக. 7) வரை நடைபெறும் இப்போட்டியில், வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்குகிறார் மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com