ஆசிரியர் தகுதித் தேர்வு: பெரம்பலூரில் 2,818 பேர் பங்கேற்பு

பெரம்பலூரில் சனிக்கிழமை 7 தேர்வு மையங்களில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் 2,818 நபர்கள் பங்கேற்றனர்.

பெரம்பலூரில் சனிக்கிழமை 7 தேர்வு மையங்களில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் 2,818 நபர்கள் பங்கேற்றனர்.
பெரம்பலூரில் சனிக்கிழமை நடைபெற்ற முதல் தாளுக்கான எழுத்து தேர்வையொட்டி 7 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 7 கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 7 துறை அலுவலர்கள் மற்றும் 9 கூடுதல் துறை அலுவலர்கள் 153 தேர்வு அறை கண்காணிப்பாளர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இத்தேர்வுகள் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப்பள்ளி, தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளி, தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பனிமலர் மேல்நிலைப்பள்ளி, பனிமலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய மையங்களில் நடைபெற்றது. 2,913 நபர்கள் தேர்வெழுத விண்ணப்பித்திருந்தனர். 95 நபர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை. மீதமுள்ள 2,818 பேர் தேர்வு எழுதினர்.
தேர்வு எழுதுபவர்களின் வசதிக்காக தேர்வு மையங்களுக்கு சென்று வர பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. மேலும், ஒவ்வொரு மையத்திலும் முதலுதவி சிகிச்சை அளிக்க மருத்துவர், செவிலியர் கொண்ட மருத்துவக் குழு மற்றும் தீயணைப்பு, மீட்பு பணிகள் துறையை சேர்ந்த அலுவலர்கள் தயார் நிலையில் இருந்தனர்.
பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற எழுத்துத் தேர்வை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் முதன்மைக் கல்வி அலுவலர் க. முனுசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com