'படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்'

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், கடனுதவி பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளார் மாவட்ட

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், கடனுதவி பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா.
வேலைவாய்ப்பு உருவாக்கும் நோக்கத்தின் அடிப்படையிலும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காகவும், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் கடன்பெற ஆன்லைன் மூலம்  இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
படித்த வேலை இல்லாத இளைஞர்கள் இத்திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க உற்பத்தி பிரிவில் ரூ. 10 லட்சம் வரையிலும், சேவைப்பிரிவில் ரூ. 3 லட்சம் வரையிலும், வியாபாரங்களுக்கு ரூ. 1 லட்சம் வரையிலும் உள்ள கடன் திட்டங்களுக்கு மாவட்ட தொழில் மைய பொது மேலாளரைத் தலைவராகக் கொண்ட தேர்வுக்குழு, வங்கிகளுக்கு பரிந்துரை செய்யும் திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் மானியமாக அதிகபட்சமாக ரூ. 1,25,000 வரை தமிழக அரசு வழங்கும்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பொதுப்பிரிவினர் 18 முதல் 35 வயது வரையிலும், சிறப்பு பிரிவினர் மற்றும் பெண்கள் 18 முதல் 45 வயது வரையிலும் இருக்கலாம்.
குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 1.50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். திட்ட மதிப்பீட்டில் பொது பிரிவினர் 10 சதவீதமும், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், முன்னாள் ராணுவத்தினர், உடல் ஊனமுற்றோர், மகளிர் மற்றும் திருநங்கைகள் 5 சதவீதமும் பங்காக செலுத்த வேண்டும்.
தகுதியான தொழில்களாக, நேரடியான விவசாயம் தவிர பொருளாதார அடிப்படையில் லாபகரமான தொழில்கள் தொடங்கலாம்.
திட்ட இலக்கீடாக பெரம்பலூர் மாவட்டத்துக்கு 2017- 2018 ஆம் நிதியாண்டில் 75 நபர்கள் பயன்பெற ரூ. 37.50 லட்சம் மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியான பட்டதாரி இளைஞர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்
என ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com