பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு ஆணை

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு மூலம் முதுகலை ஆசிரியராகப் பதவி உயர்வு வழங்கப்பட்டு, அதற்கான பதவி உயர்வு ஆணைகளை

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு மூலம் முதுகலை ஆசிரியராகப் பதவி உயர்வு வழங்கப்பட்டு, அதற்கான பதவி உயர்வு ஆணைகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தி. அருள்மொழிதேவி வெள்ளிக்கிழமை வழங்கினார்.
தமிழ், ஆங்கிலம், இயற்பியல் மற்றும் பொருளியல் பாடங்களில் தலா ஓர் ஆசிரியர் மற்றும் வணிகவியல் பாடத்தில் 2 ஆசிரியர்கள் என மொத்தம் 6 பேர் பெரம்பலூர் மாவட்டத்தில் பதவி உயர்வும், வேதியியல் பாடத்தில் 3 பேர் வெளி மாவட்டத்தில் பதவி உயர்வும் பெற்றனர்.
அதன்படி, துங்கபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சி. இளையராணி, ரஞ்சன்குடி அரசு மேல்நிலைப் பள்ளிக்கும், பாடாலூர் அரசு மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் ஆர். செல்லம் எசனை அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியராகவும், பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் பி. செல்லையா, ரஞ்சன்குடி அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியராகவும், கீழப்புலியூர் அரசு மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் எ. டூலிப், கீழப்புலியூர் அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியராகவும், கவுள்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் பி. கதிரேசன், ரஞ்சன்குடி அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியராகவும், பாடாலூர் அரசு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் பி. ராஜேந்திரன், ரஞ்சன்குடி அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியராகவும் பதவி உயர்வு பெற்றனர்.
மேலும், பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் வி. கவிதா, புதுக்கோட்டை மாவட்டம், சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியராகவும், அரும்பாவூர் அரசு மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் ஆர். பிரபு, சேலம் மாவட்டம், ஊனத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியராகவும், பாடாலூர் அரசு மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் என். வெற்றிச்செல்வி, அரியலூர் மாவட்டம், கருப்பூர் பொய்யூர் அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியராகவும் பதவி உயர்வு பெற்றனர்.
முதுகலை ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு, பதவி உயர்வு ஆணைகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தி. அருள்மொழிதேவி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பிரேம்குமார் உள்ளிட்ட கல்வித் துறையினர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com