காவல் துறையினருக்கு துப்பாக்கி சுடுதல் பயிற்சி

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், நாரணமங்கலம் கிராமத்தில் உள்ள காவல்துறை துப்பாக்கி சுடுதளத்தில், காவல்துறை அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் வருடாந்திர பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், நாரணமங்கலம் கிராமத்தில் உள்ள காவல்துறை துப்பாக்கி சுடுதளத்தில், காவல்துறை அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் வருடாந்திர பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
திருச்சி மத்திய மண்டல காவல் துறை தலைவர் வரதராஜன் தலைமை வகித்து, பயிற்சியை தொடக்கி வைத்தார்.  காவல்துறை துணைத் தலைவர்கள் கே. பவானீஸ்வரி (திருச்சி), லோகநாதன் (தஞ்சாவூர்) ஆகியோர் முன்னிலையில் காவல்துறைத் தலைவர் (கமாண்டோ) சந்திரசேகரன் பயிற்சி அளித்தார்.
இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் திஷா மித்தல் (பெரம்பலூர்), ராஜசேகரன் (கரூர்), பொன்னி (திருவண்ணாமலை), ஜெயக்குமார் (விழுப்புரம்), அபினவ்குமார் (அரியலூர்), செல்வராஜ் (புதுக்கோட்டை), மயில்வாகனன் (திருவாரூர்), சேகர் தேஷ்முக் (நாகப்பட்டினம்), கல்யாண் (திருச்சி) மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் செந்தில்(சிதம்பரம்), சக்திகணேஷ் (திருவண்ணாமலை) ஆகியோர் பயிற்சியில் பங்கேற்றனர்.
பயிற்சியின் நிறைவாக நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில், பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல் முதலிடத்தையும், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜசேகரன் 2 ஆம் இடத்தையும், நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சேகர் தேஷ்முக் 3 ஆம் இடத்தையும் பெற்றனர்.  தொடர்ந்து, போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு காவல்துறை தலைவர் (கமாண்டோ) சந்திரசேகரன் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.          

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com